காதலியுடன் ஜோடியாக போன ரவி மோகன்!! கோபத்தில் பொங்கிய மனைவி ஆர்த்தி ரவி..
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு, பராசக்தி, ஜெனி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய பெயரை மோகன் ரவி என்று இனிமேல் கூப்பிடவேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதேநேரம் கடந்த ஆண்டு 2024 செப்டம்பர் மாதம் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அறிக்கை வெளியிட்டார். இதனை தொடர்ந்து இந்த விஷயத்தில் எனக்கு விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தன் குழந்தைகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியாது, அவரிடம் பேச வேண்டும் என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் சமரச பேச்சு வார்த்தை செய்யக்கூறிய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கிய மனைவி ஆர்த்தி
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடந்த ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தி திருமணத்திற்கு, காதலி என கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனீஷாவுடன் மேச்சிங் மேச்சிங் ஆடையில் வந்துள்ளார்.
இருவரும் கைக்கோர்த்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கையை கோபத்துடன் வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகை ராதிகா மற்றும் குஷ்பூ உள்ளிட்ட பலர் ஆர்த்தி ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.