கொடியை கொடுங்க, கோட்டையை பிடிப்போம்-னு சொன்ன ரசிகர்!! ரவி மோகன் கொடுத்த ரியாக்ஷன்..
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதற்காக சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். சில நாட்களுக்கு முன் அதற்காக ரசிகர்களை அழைத்து நிகழ்ச்சியையும் வைத்திருந்தார்.

அப்போது பேசிய ரவி மோகனின் ரசிகர் ஒருவர், அண்ணா அழைப்புதழ் கொடுங்கள், தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம், கொடியை கொடுங்கள், உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம் என்று கூறியிருக்கிறார்.
அவர் பேசி முடித்தவுடன் ரவி மோகன், எழுந்து உடனடியாக சென்று அவரை கட்டிப்பிடித்து பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வந்தநிலையில், தனுஷை தொடர்ந்து ரவி மோகனும் அரசியலுக்கு வருவார் என்ற கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

பதவி, புகழ் தேவையில்லை
அதற்கு ரவி மோகன், எல்லாரும் கேள்வி கேட்பதுதான், அது தனிப்பட்ட முடிவுதான், இப்போது சினிமாவில் நான் இருக்கிறேன், சினிமாவில் இருக்கும் வரை எந்த சார்பாகவும் பேசமுடியாது. சினிமா மட்டும் தான் சாதி, மத, பேத இல்லாதல் துறை என்று பார்க்கிறேன். நல்லது செய்ய பதவி, புகழ் தேவையில்லை, எதுவுமே தேவையில்லை, எப்போதுமே செய்யலாம் என்று ஓபனாக பேசியுள்ளார்.
“Anna, give us your support… Give us the flag! We’ll come as a wave from Tamil Nadu and capture the fans’ fortress!” 🔥
— CineBuzzMedia (@CineBuzzMedia) September 6, 2026
After the fan club administrator’s words, #RaviMohan immediately met him and sought his advice! ❤️🔥 pic.twitter.com/BUm05GsNoG