பணத்தை கேட்டால் என் அம்மாவுக்கு மெசேஜ் செய்தார் ராஜ்கிரண்.. உண்மையை உடைத்த ரவீந்தர்
நடிகை மகாலட்சுமியின் கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர், கடந்த மாதம் 16 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமின் பெற்று விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்த ரவீந்தர், படத்தினை எடுப்பதற்காக பைனான்சரிடம் பணம் வாங்கி கடனில் கஷ்டப்பட்டது உண்மைதான். அப்படி ஒரு படத்தில் ராஜ்கிரண் நடிக்க, அட்வான்ஸ் தொகையாக 50 லட்சங்களை கொடுத்தேன்.
தற்போது இந்த பிரச்சனையில் பணம் தேவைப்பட்டதால் ராஜ்கிரணுக்கு மெசேஜ் அனுப்பி அட்வான்ஸ் தொகையை கேட்டேன். ஆனால் ராஜ்கிரண் பணத்தை என்னிடம் கொடுக்கவில்லை. அவர் என் அம்மாவிற்கு மெசேஜ் செய்திருந்தார். அதில், என்னால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் ஜனவரி மாதத்தில் 50 லட்சம் கொடுத்துவிடுகிறேன் என்றும் மெசேஜ் செய்திருந்தார்.
நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தயாரிப்பாளர் கஷ்டத்தில் இருக்கும் போது கொடுத்து உதவலாம் என்றும் கூறியிருக்கிறார்.