சாப்பாட்டு பக்கிகள்!! மனைவி மகாலட்சுமியை திருமணத்திற்கு பின் கிண்டல் செய்யும் ரவீந்தர்..
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Edward
தமிழில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
இரு வருடங்கள் ரகசியமாக காதலித்து வந்த ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது மிகப்பெரியளவில் பிரபலமானது. தங்கள் திருமணத்தை வைத்து விமர்சித்தவர்களுக்கு பதிலடிக்கொடுக்கும் வண்ணம் இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில், மனைவியுடன் ஓட்டலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சாப்பாட்டு பக்கிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
என் வாழ்க்கை சிறப்பாக அமைய என் மனைவியின் முகத்தில் காணும் புன்னகை தான் காரணம் என்றும் கூறியிருந்தார். அதற்கு மகாலட்சுமி என்னுடைய புன்னகைக்கு காரணம் நீங்க தான் என்று ரவீந்தரை புகழ்ந்துள்ளார்.