கார் விபத்தில் பரிபோன உயிர்!! விஜய்யால் கடைசி வரை நிறைவேறாமல் போன ஆர் பி செளத்ரியின் ஆசை..
ஆர் பி செளத்ரி
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பேனரில் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் தான் ஆர் பி செளத்ரி. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த செளத்ரி, பேவார் மாவட்டத்திலுள்ள ஜூன்டா கிராமம் அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

76 வயதான ஆர் பி செளத்ரி, தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஜூன்டா கிராமம் அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளாகியது. காரை ஓட்டி வந்த கெளதம் சேர்வி படுகாயமடைந்து சிகிச்சைக்காக ஜோத்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் இன்று சென்னை வந்துள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் ஆர் பி செளத்ரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விஜய்
40 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்புத் துறையில் இருந்தவர், 99 படங்களை தன்னுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

அவரின் 100வது படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் ஆர் பி செளத்ரி. ஆனால் விஜய் திடீரென சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துவிட்டதால், ஆர் பி செளத்ரியின் தயாரிப்பில் நடிக்க முடியாமல் போனது.
இதனால் விஜய்யை தன் தயாரிப்பில் வரும் 100வது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே அவர் மறைந்துவிட்டார். தந்தையின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் நடிகர் ஜீவா கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.