ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
Ajith Kumar
Venkat Prabhu
Box office
By Kathick
அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் எப்போது மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகும் என்றுதான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த வாரம் ரீ ரிலீஸான மங்காத்தா படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

படம் பார்த்த ரசிகர்கள் பலரும், அஜித்தை நாங்கள் இப்படித்தான் பார்க்க ஆசைப்படுகிறோம் என தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிலையில், நான்கு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மங்காத்தா ரீ ரிலீஸ், இதுவரை உலகளவில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.