கல்நெஞ்சம் படைத்தவரா அஜித்!! மறைந்த நண்பரின் மரணத்திற்கு வராமல் இருக்க இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் வீடாமுயற்சி என பெயரிடப்பட்டிருப்பதாக அஜித் பிறந்த நாளன்று வெளியானது. இதனை தொடர்ந்து கூடியவிரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளது.
பெரும்பாலும் ஒரு படம் நடித்து முடித்துவிட்டா அஜித் பைக் ரைட் செல்வது வழக்கம். அப்படி ஆரம்பித்த அஜித்தின் பைக் ரைடின் போது, ஏகேவின் பல படங்களை தயாரித்த நிக் ஆர்ஸ் எஸ் எஸ் சக்ரவர்த்தி உடல்நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார். அவரது மரணத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.
ஆனால் எஸ் எஸ் சக்ரவர்த்திக்கு நெருங்கிய நண்பராகவும் அஜித்தின் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளராகவும் இருந்த அவரது மரணத்திற்கு வராமல் இருந்தது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அப்படியொரு கல்நெஞ்சம் படைத்தவர் அஜித்தா என்று பலர் விமர்சித்து வந்தனர்.
இதுகுறித்து ஏகே தரப்பில் இருந்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். கொரானா காலத்தில் எஸ் எஸ் சக்ரவர்த்திக்கு கேன்சர் வந்த போது அவருக்கு கால் செய்து அஜித் பேசியிருக்கிறார்.
மேலும், அஜித்தின் தந்தை மரணமடைந்து ஒரு மாதமாகாத நிலையில் மற்றொரு துக்க நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என்று உறவினர்கள் கூறியுள்ளனர். இதை அஜித் புரிந்து கொண்டு தான் போகாமல் இருந்துள்ளார். அது மட்டுமின்றி, எஸ் எஸ் சக்ரவர்த்தி இறப்பிற்கு முன் அஜித், தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.