நடிகை மீனாவின் திருமண வாழ்க்கையை மாற்றிய கணவர்! மரணத்திற்கு புறாக்களின் எச்சம் தான் காரணமா

Rajinikanth Meena Indian Actress
By Edward Jun 29, 2022 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா தன் கேரியரில் ரஜினிகாந்துடன் குட்டியாக நடித்து அவருக்கே ஜோடியாகவும் நடித்த பெருமையும் மீனாவையே சேரும்.

அப்படி நடிப்பில் மிகப்பெரிய உருவாக திகழ்ந்து வந்த மீனா 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு கணவரின் முழு அனுமதியோடு படங்களில் நடித்தும் வந்தார். இதன்பின் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தன்னை போலவே தன் மகள் நைனிகாவை தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார்.

நடிகை மீனாவின் திருமண வாழ்க்கையை மாற்றிய கணவர்! மரணத்திற்கு புறாக்களின் எச்சம் தான் காரணமா | Reason Behind Actress Meenas Husband Death

நுரையீரல் பாதிப்பு

 இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் மற்றும் தாய் ராஜ் மல்லிகா, நைனிகா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவுக்கு பின் நுரையீரல் தொற்றுக்காக ஆழ்வேழ்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மரணமடைந்த மீனா கணவர்

உடல் நிலையில் சமீபகாலமாக மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் வித்யாசகர் உயிரழந்ததாக செய்திகள் வெளியானது. இவரது மறைவுக்கு பலர் இரங்கலை அறிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.

இதுதான் காரணமா?

வித்யாசாகர் மறைவுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாலும் பெங்களூர் வீட்டின் பக்கத்தில் புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசித்ததால் தான் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்கள். இரண்டு நுரையீரலையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் அப்போது கொரோனாவும் சேர்ந்து அவரது உடலை மோசமடையச்செய்ததாகவும் கூறப்படுகிறது.