பாலிவுட் சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணம்!! ரகசியத்தை உடைத்த ஜோதிகா..
தற்போது ஜோதிகா பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ஹிந்தியில் சைத்தான் என்ற படம் வெளியானது.
இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். ஹாரர் ஜானரில் வெளிவாக இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது இவர் நடிப்பில் ஸ்ரீகாந்த் என்ற வெளியாகி இருக்கிறது.
முதன் முதலில் ஜோதிகா ஹிந்தியில் வெளிவந்த Doli Saja Ke Rakhna என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை.
28 ஆண்டுகளுக்கு பின் இப்போது நடித்து வருகிறார்.
இது தொடர்பாக பேசிய ஜோதிகா , என்னுடைய முதல் படம் தோல்வியை தழுவியது. இதனால் எனக்கு பட வாய்ப்பு வரவில்லை. அதன் பின் தென்னிந்திய படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கு நடித்துவந்தேன். இந்தி படங்களில் இருந்து எனக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வரவில்லை என்று ஜோதிகா கூறியுள்ளார்.