விஜய்யை நடிகை ரம்பா சந்தித்து பேசியதற்கு நிஜமான காரணமே வேறயாம்..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாகவும் தொடையழகி நாயகியாகவும் திகழ்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை ரம்பா, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வாழ் தமிழரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். மூன்று குழந்தைகளுக்கு தாயான ரம்பா, பல ஆண்டுகள் கழித்து சென்னையில் புதிய தொழிலை ஆரம்பித்து சென்னையில் தங்கி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு தன் கணவர், மூன்று குழந்தைகளுடன் சென்று பார்த்துள்ளார். அதற்கு காரணம் என்ன என்று சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.
என் மகன் விஜய்யின் தீவிர ரசிகன் என்பதால் விஜய்யை நேரில் சந்தித்து பேசியதாக கூறியிருந்தார் ரம்பா. ஆனால் அது உண்மை என்றாலும் ரம்பாவுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதாம்.
ஹீரோயினாக இல்லை என்றாலும் படம் முழுக்க வருவது போன்ற முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என்று ரம்பா ஆசைப்படுகிறாராம். இது தொடர்பாக தான் ரம்பா விஜய்யை சந்தித்து வாய்ப்பு கேட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.