ஷூட்டிங்கில் அசிங்கப்படுத்திய நடிகை!! நடிப்பே வேண்டாம்னு தூக்கி எறிந்த நடிகர் சிவக்குமார்..
சினிமா நட்சத்திரங்களை பேட்டியெடுத்து அவர்கள் சம்மந்தமான படம் மற்றும் தனிப்பட்ட விசயங்களை பற்றி பகிர்ந்து வருகிறார் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன். யூடியூப் மூலம் பல விசயங்களை பகிர்ந்து வரும் அவர் நடிகர் சிவக்குமார் சினிமாவில் இருந்து விலக என்ன காரணம் என்று பகிர்ந்துள்ளார்.
சிவக்குமார் படங்களில் நடிப்பதை நிறுத்தி சீரியலில் நடித்து வந்துள்ளார். அப்படி ஒரு சீரியலில் நடித்து வந்தபோது உணர்ச்சிவசமான ஒரு டயலாக்கை பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த சீரியலில் நடித்த சக துணை நடிகை சத்தமாக போனில் சிரித்துக்கொண்டு பேசியிருந்தார்.
இது சிவக்குமாருக்கு இடையூறாக இருக்க, நடிகையிடம் சென்று என்னம்மா ஒரு டயலாக் பேசும் போது இப்படி சத்தம் போட்டு பேசிட்டு இருக்க என்றூ நேராக சென்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகை, என்ன சார் இப்படி பண்றீங்க, என்ன சார் இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க, உங்களுக்கு தெரியாதா டப்பிங்கில் எப்படியும் பேசப்போறீங்க, அதுல பாத்துக்கோங்க என்று நக்கலே கிண்டல் செய்து பதிலளித்திருக்கிறார்.
தன்னை அசிங்கப்படுத்தியதாக நினைத்தும் அப்போது இருந்த சினிமா வேறு இப்போது இருக்கும் சினிமா வேறு என்று நினைத்தும் சீரியலில் நடிப்பதை தூக்கி எறிந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.