10 வருஷமாக இந்த விஷயத்தை கண்டு பயப்படும் தளபதி விஜய்! இப்ப மட்டும் எப்படி முடிஞ்சது?
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம்தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
ட்ரைலரை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் விஷயம், விஜய்யின் பேட்டி தான். 10 ஆண்டுகளுக்கு பின் சன் தொலைக்காட்சியில் பேட்டி தரும் நடிகர் விஜய்யிடம், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் கேள்வி கேட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய்யிடம் ஏன் 10 ஆண்டுகள் கழித்து பேட்டி தருகிறீர்கள். அதற்கான காரணம் ஏதேனும் உண்டா என்று நெல்சன் கேட்டிருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் வில்லு படத்தின் பிரஸ் மீட்டின் போது, விஜய் கோபத்தில் கத்தியது என்பது தான் என்றும், தலைவா படத்தின் போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.