20 வருட சினிமா வாழ்க்கையில் இதை மட்டும் தான் செய்வேன்!! நயன்தாரா எடுத்த முடிவுக்கு இதான் காரணம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. 2003ல் நடிகையாக அறிமுகமாகி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நயன், பாலிவுட் நடிகையாக ஜவான் படத்தில் நடித்துள்ளார்.
20 ஆண்டுகளில் தன் தயாரிப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே நயன் தாரா பெரும்பாலும் கலந்து கொண்டு வருகிறார். தான் நடிக்கும் படத்தின் பிரமோஷனுக்கு செல்லாமல் இருப்பது குறித்து நயன் தாரா மீது தயாரிப்பாளர்கள் புகாரளித்து வந்தனர்.
ஆனால் தன் தயாரிப்பில் வெளியாகும் படத்திற்கு கூட இணையத்தில் பிரமோஷன் செய்யாத நயன், பாலிவுட் படத்திற்காக இன்ஸ்டாகிராமில் தனியாக ஒரு கணக்கை துவங்கி 24 மணிநேரத்தில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றார்.
அதற்கேற்ப சென்னை நடந்த ஆடியோ நிகழ்ச்சியில் கூட நயன் தாரா கலந்து கொள்ளவில்லை. அதனால் படக்குழுவினர் இணையத்தில் ஆவது பிரமோஷன் செய்யுங்களேன் என்று கூறியதால் தான் நயன் தாரா இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்தாராம்.
#WATCH | Andhra Pradesh: Actor Shah Rukh Khan, his daughter Suhana Khan and actress Nayanthara offered prayers at Sri Venkateshwara Swamy in Tirupati pic.twitter.com/KuN34HPfiv
— ANI (@ANI) September 5, 2023
மேலும், கணவர் விக்னேஷ் சிவன், ஷாருக்கான் அவரது குடும்பத்தினருடம் சேர்ந்து ஜவான் படம் வெற்றிப்பெற திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
இதன்பின் நடித்து வெளியாகும் படங்களை பிரமோட் செய்யவும் இருக்கிறார் நயன் தாரா. ரஜினி, விஜய், சூர்யா போன்ற நடிகர்களுக்கு கொடுக்காத ஆர்வம் ஷாருக்கான் ஒருவருக்காக நயன் தாரா இதை செய்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.