பிரச்சனைக்கு காரணமே இதான்! சூர்யாவால் புலம்பும் இயக்குனர் பாலா..

Suriya Bala
By Edward May 24, 2022 08:00 PM GMT
Report

பல ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா பாலாவின் இயக்கத்தில் அவரது 41 வது படத்தில் நடிக்க கமிட்டாகி கன்னியாக்குமரியில் படப்பிடிப்பும் ஆரம்பித்தது. 18 ஆண்டுகள் இருவரின் மனநிலையிலும் சினிமாவில் கிடைத்த வளர்ச்சியும் வெவ்வேறாக மாறியுள்ளது.

அப்படி உச்சத்தை அடைந்த சூர்யா தானே இப்படத்தினை தயாரித்தும் கீர்த்தி செட்டி மற்றும் காதல் மனைவி ஜோதிகாவையும் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில் பாதி படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை முட்ட அங்கிருந்து சென்றே இருக்கிறார் சூர்யா.

இதனால் ஷூட்டிங் கேன்சலாகி பேக்கப் செய்யப்பட்டது, ஆனால் முதல் கட்டப் படப்பிடிப்பு தான்முடிந்துள்ளது. மீதமுள்ள காட்சிகள் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஜூன் மாதத்திற்காக காத்திருந்து வருகிறார் பாலா.

ஆனால் சூர்யா இருக்கும் சூழலில் படபிடிப்பிற்கு வருவாரா என்பது கேள்வியாக தான் இருக்கிறது. சூர்யா முன்பு போல் இல்லை. பாலா எப்போதும் போல் அவர் இருக்கிறார். சூர்யா முதல் படத்தில் பாலாவுடன் இருந்த சூர்யா இப்பொழுது இல்லை. அவர் வளர்ந்து விட்டார்.

அதனால் பிரச்சினை முற்றுகிறது. எப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரியவில்லை. சூர்யா-பாலா இருவருக்கும் இடையே இருக்கும் சலசலப்பை ஒரு சிலர் முயற்சி எடுத்து வருவதாகவும் சென்னையிலேயே ஷூட்டிங்கினை வைத்துவிட்டு மீதமுள்ளதை கோவாவில் வைத்துக்கொள்ளலாம் என்று பாலா முடிவெடுத்திருகிறாராம்.