ஊரே ஒதுக்கிய குரல்!! திரிஷா மூலம் வாய்ப்பு கொடுத்த விஜய், லோகி..

Trisha Lokesh Kanagaraj Chinmayi Leo Vijay Yesudas
By Edward Oct 09, 2023 02:57 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்து வெளியாகவுள்ள படம் லியோ.

வரும் அக்டோபர் 18 மாலை முதலே வெளியாகவுள்ள லியோ படத்தின் எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக டப்பிங் குரலுக்கும் பாடலை பாட வாய்ப்பினை இழந்த பாடகி சின்மயிக்கு லியோ படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் லலித், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ்.

இத்தனை வருடங்களாக சமுகவலைத்தளத்தில் மட்டும் குரலை எழுப்பி வந்த சின்மயி, தற்போது லியோ படத்தில் திரிஷாவின் குரலுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார்.

இதை தவிர தெலுங்கு மொழியில் உருவான விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி படத்திற்கு சமந்தாவின் குரலுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் பாடகி சின்மயி.