யாரையும் நம்ப வேண்டாம்.. பொறாமையில் இப்படி பண்றாங்க.. கண்ணீர் மல்க பேட்டி அளித்த ஓட்டேரி சிவா
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதில் கோமாளியாக நடித்து புகழ், பாலா, சிவாங்கி போன்றவர்கள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டியிருக்கிறது.
இந்த சீசனில் புதுமுக கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா போன்ற சிலர் பங்கேற்றுள்ளனர்.
இதில் புதிதாக வந்த ஓட்டேரி சிவா CWC -வில் குடித்துவிட்டு வருவதால் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.
நம்ப வேண்டாம்!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓட்டேரி சிவா இது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " எனக்கு குடி பழக்கம் இல்லை. உணவு எவ்ளோ கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன். நான் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனதால் பொறாமையில் இது போன்ற தவறான கருத்துக்களை கூறுகின்றனர்".
"என்னை CWC-வில் இருந்து நீக்கவில்லை, அவர்கள் என்னிடம் விரைவில் அழைக்கிறோம் என்று தான் சொன்னார்கள். என் மீது சுமத்தும் பொய்யான கருத்துக்களை நம்ப வேண்டாம்" என்று கண்ணீர் மல்க பதில் அளித்தார்.