மகள் படத்தில் முஸ்லிமாக நடிக்க காரணமே இதான்!! ரஜினிகாந்தின் ரகசியத்தை உடைத்த பயில்வான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் மகள் பல ஆண்டுகள் கழித்து இயக்கவுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க லால் சலாம் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. மேலும் ரஜினிகாந்த் இப்படத்தில் முஸ்லீமாக நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என்ற உண்மையை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் கதையை முதலில் கேட்ட லைக்கா நிறுவனம் வேண்டாம் என்று ஒதுக்கியதாம். ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தால் ஓகே என்று ஐஸ்வர்யாவுக்கு கண்டீசன் போட்டதால் ரஜினிகாந்த் மகளுக்காக அப்படத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே முஸ்லிமாக பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றாலும் டைட்டிலை பாட்ஷா என்று வைக்க சம்மதித்திருக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் லால் சலாம் டைட்டிலில் முஸ்லிமாக நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இதற்கு காரணம் ரஜினிகாந்த் குறிப்பிட்ட கட்சியை சார்ந்து செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்து பரவலாக பேசப்பட்டு வந்துள்ளது. அதை உடைக்கத்தான் ரஜினி முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
இக்கதையை முதலில் ரஜினிகாந்த் கேட்டு மிரண்டு போனதால் தான் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இக்கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார்.