விவாகரத்தான பிறகும் ஹைதராபாதில் தங்கும் சமந்தா.. சென்னை வராததற்கு இது தான் காரணமா?
தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன் பின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது இவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ம் தேதி வெளியாவுள்ளது.

சமந்தா நாக சைதன்யாவை காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் அதிக நாள் நிலைக்கவில்லை. சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் 2020 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
சமந்தா விவாகரத்துக்கு பின்பும் சொந்த ஊரான சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நோயால் அவதி பட்டு வந்ததால் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் இருந்தாராம். அப்போது அவரின் தாயாரும் அங்கு சென்று கவனித்து கொண்டதால் ஹைதராபாத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
