தளபதி68-ல் உள்ளே புகுந்து குளறுபடி செய்யும் டாடி!! பிரசாந்தால் கடும் கோபத்தில் விஜய்..
லியோ படத்தினை அடுத்து விஜய் அவரது 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் வேலைகள் ஒருபுறம் இருக்க, விஜய்யை மீறி பல அப்டேட்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.
அப்படி படத்தின் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு டஃப் கொடுத்து வந்த நடிகர் பிரசாந்தை எப்படி விஜய் ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு பின் ஒரு பிளான் இருக்கிறதாம். பிரசாந்த் கால்ஷீட்டினை அவரது தந்தை தியாகராஜன் தான் பார்த்து வருகிறாராம்.
அவர் பல தெலுங்கில் கேரக்டர் ரோலில் நடித்து வந்துள்ளார். மேலும் அந்தகன் படம் ரிலிஷாகாமலும் இருக்கிறது.
தற்போது விஜய் படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்தால் அவரது மார்க்கெட் குறையும் என்பதற்காக தியாகராஜன் தளபதி 68க்கு ஒரு கண்டீசனை போட்டுள்ளாராம். அதாவது, பிரசாந்த் கால்ஷீட் கொடுத்த 30 நாட்களில் நடித்த காட்சிகள் அனைத்து படத்தில் இருக்க வேண்டுமாம்.
எந்த காரணத்திற்கும் அதை நீக்கக்கூடாது என்றும் கூறி குளறுபடி பண்ணியிருக்கிறாராம். இதனால் விஜய் கடும் டென்ஷனாகவும் வெங்கட் பிரபு குழப்பத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.