இப்படியொரு வாய்ப்பு எஸ்பிபி-க்கு கூட கொடுக்காத இசைஞானி! இருவரை நம்பி ரிஸ்க் எடுத்த இளையராஜா..
சினிமாவில் ஒரு படத்தில் பல விதமான பாடல்கள் அமையும். அதிலும் அப்பாடல்களை குறைந்தது 4 பாடகர்களாவது அப்படத்தில் பாடி இருக்க முடியும். ஆனால் ஒரே படத்தில் அனைத்துப்பாடல்களையும் ஒரே ஒருவர் பாடுவது என்பது அறிதான ஒரு விஷயமாக இருக்கும்.
அப்படி செய்து காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா, இதனை ஹரிஹரன், ஜேசுதாஸ் இருவரை வைத்து இந்த சாதனை செய்துள்ளார்.
காசி படத்தின் போது அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் குரலில் தான் இளையராஜா இசையை கொடுத்து ஹிட் கொடுத்தார். ஹரிஹரன் பாடிய அனைத்து பாடல்கள் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் சிந்து பைரவி படத்தின் அனைத்து பாடல்களையும் பாடகர் ஜேசுதாஸ் பாடியிருப்பார். அதுவும் இப்படத்தில் சுமார் 12 பாடகல்கள் இளையராஜா அமைத்து கொடுத்திருப்பார். அதில் 10 பாடல்கள் ஜேசுதாஸ் அவர்கள் தான் பாடியுள்ளார். மற்ற இரு பாடல்களை சித்ரா பாடி கொடுத்திருப்பார்.
அப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுப்பதற்கு பாடல்களே காரணமாக அமைந்தது. இப்படியும் இளையராஜா ஒரு சாதனையை செய்திருக்கிறார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். ஆனால், இதை எஸ்பிபி, கேவி மகாதேவன் இசையில் ஒரே படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியிருக்கிறார்.