சங்கரால் வடிவேலுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்ட்! மீண்டும் களமிரங்கும் நேசமணி
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவன்களான கவுண்டமணி - செந்திலுக்கு அடுத்ததாக பேசப்படும் ஜாம்பவான் வைகைபுயல் வடிவேலு தான். தன் காமெடியால் மக்கள் மனதை ஈர்த்து வந்த வடிவேலு இயக்குநர் சங்கர் தயாரிக்கும் 24ஆம் புலிகேசி படத்தில் சில கருத்து வேறுபாடுகளால் நடிக்கவில்லை என்று கூறி பிரச்சனையை ஏற்படுத்தினார்.
அதனால் இயக்குநர் சங்கருக்கு கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது என தயாரிப்பாளர்கள் இடத்தில் புகாரளித்தார். இதையடுத்து வடிவேலு சினிமாவில் நடிக்க தடை செய்து சில காலங்கள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. தற்போது அப்படத்தின் மீதான சங்கர் மற்றும் வடிவேலுவுக்கிடையே சமரசம் ஏற்பட்டு நடிப்பதற்காக விதிக்கப்பட்ட ரெட் கார்ட்டை நீக்கியுள்ளனர்.
இதனால் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி என்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்கவிருப்பதாகவும், 2 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.