சங்கீதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளா இது?..ரெடின் கிங்ஸ்லி உடன் இருக்கும் புகைப்படம் வைரல்
சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம். இவர்களின் திருமணம் மைசூரில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளிவந்தது. அதில், அவரின் பெற்றோர் கடந்த 2009-ஆம் ஆண்டு, கிரிஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரியவந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறாராம். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மைசூரில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள், இது தான் சங்கீதாவின் மகளா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
You May Like This Video