45 வயதில் ரெடின் கிங்ஸ்லி உடன் 2-வது திருமணம்!! சங்கீதாவின் முதல் கணவர் யாரென்று தெரியுமா?
தமிழில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா.
45 வயதான இவர், சமீபத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்துகொண்டார். எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சங்கீதாவின் முதல் திருமணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், சங்கீதா கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மகள் உள்ளார்.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா முதல் கணவரை பிரிந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்த நடிகை சங்கீதா தற்பொழுது பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.
You May Like This Video