திருமணத்திற்கு பின்பும் பெண்களுடன் அப்படி தான் இருக்கிறார் !! உண்மையை கூறிய ரெடின் மனைவி சங்கீதா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து கடந்த ஆண்டு காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. இரு ஆண்டுகளாக காத்திருந்த சங்கீதா கடந்த ஆண்டு சாதாரண முறையில் மைசூரில் ரெடின் கிங்ஸ்லியை மணந்தார்.
46 வயதில் நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லியை பலர் இணையத்தில் விமர்சித்து வந்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து இணையத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகை சங்கீதா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கவின் நடிக்கும் Bloody Begger படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிக்கும் வீடியோவில் அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீக்குமார் பிரமோ வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரெடின் கிங்ஸ்லி கல்யாணமாகிவிட்டது, உங்களோடு சேர கூடாதுன்னு மனைவி சொல்லிட்டா என்று கூறியிருப்பார்.
அதுபற்றி சஞ்கிதாவிடம் கேட்ட போது, ஆமாம், அதெல்லாம் நிஜம் தான் சேரக்கூடாதுன்னு சொல்லிட்டு சேர்ந்து சுத்திகிட்டு இருப்பார். பகலில் தூங்கிட்டு நைட்டு நெல்சனுடன் இருப்பார். அதன்பின் அதிகாலை 4, 5 மணிக்கு தான் வருவார். இப்படி இருந்தால் எந்த பொண்டாட்டிக்கு ஒத்துப்பாங்க, நெல்சன் வீடு தான் மாமியார் வீடு என்று புலம்பியிருக்கிறார்.
மேலும், அவர் தீராத விளையாட்டு பிள்ளை தான். 4 பசங்க 1 பொண்ணு இருந்தா, பர்ஸ்ட் அந்த பொண்னு கிட்டதான் போய் பேசுவாரு, அந்த மாதிரி ஆள் தான். மலையாள படத்தின் ஷூட்டிங்கில் பெண் உதவி இயக்குனர் என் கண் முன்னே கிள்ளி கொஞ்சி இருந்தார் என்று சங்கீதா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.