பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று ஆடம்பரமாக புதிய விதிமுறைகள் உடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா நாயர் கலந்துகொள்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரேகா நாயர் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், காசுக்காகவும் பிரபலமடைவதற்காகவும் நான் அங்கு செல்வது எல்லாம் சரி என எனக்கு படவில்லை.
அதுமட்டுமின்றி முதல் சீசனில் ஒரிஜினாலிட்டி இருந்தது. அனலை கொஞ்சம் போக போக ஸ்கிரிப்ட்டடாகவே மாறிவிட்டது. என்னை பொறுத்த வரை ஜெயிலில் இருப்பதும் அங்கு இருப்பதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
கமல்ஹாசன் என்ற உச்ச பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்து அவரையும் வியாபாரம் பேசுகிறது. இந்த கமல் சார் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அவர் இதை செய்ய மாட்டேன் என சொல்லியிருக்க வேண்டும் என்று ரேகா நாயர் கூறியுள்ளார்.