அவங்களுக்கு கற்புன்னு ஒன்னு இல்லவே இல்ல!! திரிஷா விசயத்தை வெளுத்து வாங்கிய ரேகா நாயர்..
தமிழ் திரைத்துறையில் சமீபகாலமாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் சம்பவம் என்றால் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது தான். இதுகுறித்து பல நட்சத்திரங்கள் கருத்துக்களை கூறி வந்த நிலையில் இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயர் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமுகவலைத்தளத்தில் எது சொன்னாலும் வைரலாகும் என்று ஊடகங்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்ட மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவை பார்த்தார்ங்களா எல்லோரும். சோசியல் மீடிய வளர்ந்துவிட்டதால் சிறுசிறு விசயங்கள் கூட பெரிதாகிவிடுகிறது. அதுதான் மன்சூர் அலிகான் விசயத்தில் நடந்துள்ளது.
அப்படி பேசிய திரிஷா, இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறி அறிக்கைவிட்டு பிரச்சனையை முடித்துவிட்டார். ஆனால் இதையார் பெரிதாக்கியது.
மன்சூர் அலிகான் பேசியது தவறு என்று லோகேஷ் கனகராஜ் அவரிடம் பேசி அண்ணா இப்படி பேசிட்டீங்க, திரிஷாவிடம் பேசுங்கன்னு சொல்லி இருந்தா முடிந்து இருக்குமே. அதை பொதுவெளியில் கண்டனம் தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ்.
மேலும் பேசிய ரேகா, ஆண் பிரச்சனையோ பெண் பிரச்சனையோ, அதில் பாதுப்படைவ்து பெண் தான். உடல் ரீதியாக பாதிப்படைகிறாள். பெண்களுக்கு கற்புன்னு ஒன்று இல்லவே இல்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்பது தான் அதற்கான சரியான பொருள்.
நான் மன்சூர் அலிகானுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடப்பவர்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு என்றும் நான் சின்னதாக ஆடை போடுவது என் விருப்பம்.
அதை போட்டு நான் வெளியில் வரும் போது ஒருவன் தொட்டால், கழுத்தை பிடித்து கேட்பேன், அதுதான் பெண் சுதந்திரம் என்றும் ஆடையில்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ரேகா நாயர்.