நடிகைக்கு சொல்லாமல் லிப்லாக் அடித்த கமல் ஹாசன்!! முத்தக்காட்சி பற்றி ஹீரோயின் ஓபன் டாக்..
நடிகை ரேகா
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா. 1986ல் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் நடித்து மிகப்பெரியளவில் பேசப்பட்டார் ரேகா. அப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் திடீரென லிப் லாக் அடித்தது குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், அந்த முத்தக்காட்சியை பற்றி பாலசந்தர் என்னிடம் எதுவும் கூறவில்லை. இதுவரைக்கும் யாரும் சொல்லவும் இல்லை. அது ஒரு முத்தக்காட்சி என்பது எனக்கு தெரியாது.
படத்தின் கதைப்பற்றியோ, தன் கதாபாத்திரம் பற்றியோ கூட இயக்குநரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளும் அளவிற்கு தான் அப்போது பெரிய நடிகையில்லை. பாரதிராஜா போன்ற இயக்குகர்களின் படங்களில் கூட அவர்கள் சொல்லிக்கொடுத்ததை மட்டுமே நடிப்பேன்.
நான் போய் சப்ஜெக்ட் கேட்கிற அளவிற்கு நான் அந்த பெரிய நடிகை கிடையாது. உயரமான இடத்தில் இருந்து காதலர்கள் குதிப்பது போன்ற காட்சி தயாராக இருந்தபோது, இப்போ குதிக்கப்போறீங்க, ரெடி, ஒன் டூ த்ரீ..கமல் நான் சொன்னது நியாபகம் இருக்கா? ஓகே டு இட் நோ பிராப்ளம் நான் பார்த்துக்கிறேன் என்று இயக்குநர் சொன்னார்.

லிப்லாக் அடித்த கமல்
கண் திறந்தால் சாகுற மாதிரி நடிக்கணும் என்று இயக்குநர் அறிவுத்த, கணகளை இறுக்கமாக மூடினேன். பின் டக்குன்னு பிடிச்சு ஒன் டூ த்ரீன்ன உடனே கிஸ் பண்ணிட்டு ஜம்ப்னுட்டாங்க. முத்தக்காட்சி திடிரென நிகழ்ந்ததால் அந்தத் தருணத்தில் தனக்கு சினிமா பற்றியோ அல்லது வேறு எதைப்பற்றியோ எண்ணம் வரவில்லை.
தன் அப்பாவுக்கு இந்த விசயம் தெரிந்தால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரே என்று மட்டும் தான் பயந்தேன். சார் அவர் முத்தம் கொடுத்துட்டாரு சார், எங்க அப்பா ஒத்துக்கவே மாட்டாரு சார் என்று படப்பிடிப்பு முடிந்ததும் பால்சந்தரிடம் கேட்டேன். அதற்கு அவர், அம்மா அது ஏதோ ஒரு கிங் வந்து ஒரு சின்ன குழந்தைக்கு முத்தம் கொடுத்த மாதிரி என்று தற்காலிகமாக சமாதானம் செய்தார் என்று ரேகா பகிர்ந்துள்ளார்.