ரூ. 1000 கோடி சொத்து இருந்தும் வாரிசு இல்லாமல் தனிமை வாழ்க்கை!! ரேகா சொத்துக்கு யார் சொந்தம்?
ரேகா
பாலிவுட் சினிமா உலகில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகையும் ஜெமினி கணேசனின் மகளுமான ரேகா 1990ல் முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 7 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, ஒரு கட்டத்தில் முகேஷ் அகர்வால், ரேகாவின் துப்பாட்டாவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவத்திற்குப்பின் ரேகா மீது நிறைய பழிகள் சுமத்தப்பட்டன. வில்லி சூனியக்காரி, ராட்சரி என்றெல்லாம் ஊடகத்தில் சித்தனர் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
பாலாஜி பிரபு
அதில், ரேகா ஆரம்பகால வாழ்க்கை, பல்வேறு மனவேதனைகளும் சவால்களும் நிறைந்ததாகவே இருந்தது. ஜெமினி கணேசனுக்கு 4 மனைவிகள் என்று கூறப்படும் நிலையில், அம்சவல்லிக்கு மட்டும் முறையான அங்கீகாரம் வழங்கவில்லை. பள்ளியில் சேர்ப்பது முதல் ஆரம்பகால சினிமா அடையாள சான்றுகள் வரை எதிலும் ரேகாவிற்கு அப்பாவின் பெயரை சேர்ப்பதில் பல சிக்கல்களும் மன வருத்தங்களும் ஏற்பட்டது.

ஒரு பேட்டியில் அப்பாவை பற்றி கேட்டதற்கு, அவரைப்பற்றி பேசவே நான் விரும்பவில்லை என்று கூறினார் ரேகா. அந்தளவிற்கு தன் அம்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதால் அப்பா மீது அவருக்கு கோபமும் வருத்தமும் இருந்தது.
ஒருக்கட்டத்தில் அம்சவல்லிக்கு சினிமா வாய்ப்புகள் சரிந்து குடும்பம் கடுமையான கடன் சுமைக்கு ஆளானது. இதனால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் ரேகா, தன்னுடைய 12 ஆம் வயதிலேயே தெலுங்கு படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கை தொடங்கினார்.

சொத்து
தென்னிந்தியாவில் வாய்ப்புகள் இல்லாததால், மும்பைக்கு சென்றாலும் பல அவமானங்கள் காத்திருந்தது. நிறத்தை வைத்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்தி பேசத்தெரியாததால் அதை கற்றுக்கொண்டு டாப் நடிகையானார். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் பல பெயர்கள் வைத்தனர். ரேகாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 500 முதல் 1000 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். மும்பை பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் ஒரு பிரமாண்ட பங்களாவில் தற்போது வசித்து வருகிரார்.
இதைத்தவிர இந்தியா முழுதும் பல மலைப்பிரதேசத்தில் கெஸ்ட் ஹவுஸ், துபாயில் ஒரு ஆடம்பர வீடு, பல சொகுசு கார்கள் உள்ளன. கணவரின் மறைவிக்குப்பின் ரேகா மறுமணம் செய்யவில்லை, அதனால் அவருக்கு வாரிசுகளும் இல்லை. வாரிசுகள் இல்லாததால், ரேகா தன்னுடைய 1000 கோடி மதிப்பிலான் சொத்துக்களை தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைப்பார் என்றும் அதில் ஒரு பகுதியை தன்னை நிழல் போல் பார்த்துக்கொள்ளும் தோழி ஃபர்சனாவிற்கு வழங்குவார் என்றும் மும்பை பத்திரிக்கைகள் கூறுகிறார்கள்.