அக்கா சிந்துவ தெரியும்!! வனிதாவுக்கும் சஞ்சீவ்-கும் இப்படியொரு உறவு முறையா?
சஞ்சீவ் வெங்கட்
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நடித்து முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சஞ்சீவ் வெங்கட். விஜய்யின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்து வரும் சஞ்சீவ், சமீபத்தில் வேடுவன் என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ்யானது.

வனிதா
இந்நிலையில் சஞ்சீவ் வெங்கட் பற்றிய சில தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சஞ்சீவ் வெங்கட்டின் சகோதரி மறைந்த நடிகை சிந்து என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் தாயார் பற்றிய தகவல் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

நடிகர் விஜயகுமாரின் மனைவியும் வனிதா விஜயகுமாரின் அம்மாவுமான மஞ்சுளா விஜயகுமாரின் சகோதரி ஷாமலா தான் சஞ்சீவ் மற்றும் சிந்துவின் தாயாராம். அப்படி என்றால் வனிதா விஜயகுமாரின் நெருங்கிய உறவினர் தான் சஞ்சீவ் என்ற தகவல் தற்போது பரவலாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.