பணகஷ்டம்! அஜித் பயன்படுத்திய பைக்கை விற்று வாடகை கட்டிய நடிகர்!

dheena ajithkumar thalaajith sampathrao
By Edward Jul 21, 2021 09:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் அஜித். வலிமை படத்தின் வெளியீடு இந்த வருடம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். அஜித்தின் ஆரம்பகால மாஸ் படமாக அமைந்தது தீனா. தல அஜித்தை முதன்முதலில் கூப்பிட வைத்து அப்படத்தில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தான் வைத்துள்ளார்.

2001ல் வெளியான இப்படத்தில் அஜித்துடன் பல வில்லன்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒருவராக நடித்தவர் நடிகர் சம்பத் ராவ். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தீனா படத்தில் நடித்ததை பற்றியும் அஜித்தை பற்றியும் பகிர்ந்து பேசியுள்ளார். தீனா படத்தில் நடித்த பிறகு தான் மக்கள் என்னை அங்கீகரித்தார்கள். அஜித் சாருக்கு தான் நன்றி சொல்லணும். தீனா படத்தில் அஜித் பயன்படுத்திய புல்லட் பைக் என்னுடையது தான். ஆனால் துரதிஷ்டவசமாக அதை விற்க வேண்டியதாகி விட்டது.

ஒரு சமயம் மிக கடுமையான பண கஷ்டத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் என்னால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. அதனால் வேறு வழியில்லாமல், வாடகை பணத்தை கொடுப்பதற்காக அந்த பைக்கை விற்று வாடகை கொடுத்தேன் என்று சோகத்துடன் கூறியுள்ளார். தன்னை தேடி வருபவர்களை கணிவுடனும், ஊக்கமளிக்கும் வகையிலும் பேசக் கூடியவர் என்று கூறியுள்ளார்.