அந்தமாதிரி ஆடை போடுவது எனக்கு சாதாரணம்! பிக்பாஸ் ரேஷ்மாவை கடுமையாக திட்டும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் என்ற படத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து அமெரிக்காவில் செட்டிலாகி இரு திருமணங்களில் ஏற்பட்ட கஷ்டத்திற்கு பின் இந்தியா வந்தார். பின் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
நிகழ்ச்சி படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வந்த ரேஷ்மா நிகழ்ச்சி பிறகும் இன்ஸ்டாகிராம் மோசமான போட்டோஷூட் நடத்தி வாய்ப்பிளக்க வைத்து வந்தார். தற்போது அன்பே வா, கண்ணான கண்ணே, பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா. சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளத்த ரேஷ்மா, க்ளாமர் ஆடை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
வேண்டுமென்றே அப்படியான ஆடையில் ஈர்க்க ஆசைப்படுகிறீர்களா என்று கேட்க, இது எனக்கு சாதாரணம் தற்போது காலம் மாறிவிட்டது. அனைத்து கடைகளிலும் இதுபோன்ற ஆடைகள் விற்கிறார்கள், மக்களும் வாங்குகிறார்கள் என்று கூறியுள்ளார். அவரவர் விருப்பம் அவர்கள் ஆடையணிவது அவர்கள் விருப்பம் என்றும் கூறியுள்ளார். இதைபார்த்து பல ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.