18 வருடத்தில் மூன்று திருமணம்! நடிகை லட்சுமி யாருடன் இருக்கிறார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் 60களில் அறிமுகமாகி தற்போது வரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை லட்சுமி. முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வந்தார்.
1969ல் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் வாழ்க்கைக்கு பிறகும் சினிமாவில் நடித்து வந்த லட்சுமி, ஐஸ்வர்யா என்ற மகளை பெற்றார். அதன்பின் 5 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டார். அடுத்த ஆண்டே நடிகர் மோகன் சர்மாவை திருமணம் செய்தார் லட்சுமி.
இருவரும் சினிமா நட்சத்திரங்கள் என்பதால் கிசுகிசுக்கள் தோன்ற அதுவும் 5 ஆண்டுகளே நீடித்தது. அவரை விவாகரத்து பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிவசந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.
35 வருடமாக இருவரும் சந்தோஷமாக இருந்து சம்யுக்தா என்ற பெண் குழந்தையை பெற்றெனர். முதல் கணவருக்கு பிறகு ஐஸ்வர்யா சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். லட்சுமியும் அவரது அம்மாவும் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து முன்னணி நடிகைகளாக இருந்து வந்தனர்.
அவரும் அம்மாவை போன்று இரு திருமணம் செய்து கொண்டவர் தான். தற்போது ஐஸ்வர்யா, அம்மா லட்சுமியுடன் இல்லாமல் தந்தை பாஸ்கரின் அடுக்குமாடி குடியிருப்பில் தன் மகள் அனைனாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறாராம்.