விஜய்யை விடுங்க..தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர் யார் தெரியுமா? இத்தனை கோடி சொத்தாம்...
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியின் அனைத்து தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

அப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். அந்தவகையில் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்று குறிப்பிட்டு வேட்புமனுவை அளிப்பார்கள்.
லீமா ரோஸ் மார்டின்
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின் தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வர வேட்பாளராக திகழ்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

அவர் சமர்ப்பித்த வேட்புமனு ஆவணங்களின்படி, லீமா ரோஸின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் ரூ.1048 கோடி என்று தெரிவித்துள்ளார். நகைகள் உள்ளிட்ட ரூ.139.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள்.
நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட ரூ.909.94 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருக்கிறது. இதுதவிர அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் அளித்து வியக்க வைத்துள்ளார்.

லாட்டரி தொழிலதிபரான இவரது கணவர் மார்ட்டின் பெயரில் ரூ. 4,159 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறதாம். அதில் ரூ.3,262 கோடி அசையும் சொத்தும் ரூ. 887.36 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன.
இவர்களது மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ. 665 கோடி சொத்துக்கள் இருக்கிறதாம். அதில் ரூ.225.56 கோடி அசையும் சொத்தும் ரூ. 439.21 கோடி அசையா சொத்துக்க்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் லீமா ரோஸ்.