விவாகரத்துக்கு பின் கணவர் கெஞ்சினாரு..வேண்டானு சொல்லிட்ட!! நடிகை ரிஹானா ஓபன் டாக்..
ரிஹானா
சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரிஹானா, சமீபகாலமாக சிக்கல்களில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட தனக்கு தாலிக்கட்டி தொழிலதிபர் ஏமாற்றிவிட்டதாக கூறி வந்தார். தற்போது அளித்த பேட்டியொன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து பேசியுள்ளார்.
அதில், என்னுடைய முன்னாள் கணவர் என்னையும் என் குழந்தைகளை விட்டுப்பிரிந்து சென்றதால் தான் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், இது நிதி நெருக்கடிகளை உருவாக்கியது.
இந்த துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் காரனமாக ஒருக்கட்டத்தில் தற்கொலைக்கு கூட முயன்றேன். நடிப்பதை தவிர வாழ்வாதாத்திற்காக செவிலியர் மற்றும் மெஸ் சர்வீஸ் போன்ற வேலைகளை செய்தேன்.
என் மகளின் பள்ளி கட்டணத்திற்காக முன்னாள் கணவரிடம் உதவி கேட்டபோது, அவர் ரூ. 35 ஆயிரம் கொடுத்தார். முன்னாள் கணவர் நான் செய்தது தவறு மன்னித்துவிடு, மீண்டும் நாம் சேர்ந்து வாழலாம் என்று கெஞ்சினார். ஆனால் நான் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்ததால் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நடிகை ரிஹானா.