கொடுமைப்படுத்திய கணவர்!! விவாகரத்து செய்த மெகாஸ்டார் மகளின் சோகக்கதை..
சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிரஞ்சீவி மெகா ஸ்டார் என்று புகழப்பட்டு வருகிறர். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற குடும்பமாக திகழ்ந்து வரும் சிரஞ்சீவி மகள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா தன் வாழ்க்கையில் பல சவால்கள் மற்றும் சிக்கல்களை சந்தித்துள்ளார்.
மிகவும் இளமையான வயதான 19 வயதில் குடும்பத்தினர் விருப்பத்திற்கு முற்றிலும் மேலாக தானே காதலித்து வந்த ஒருவரை திருமணம் செய்தார். பெற்றோர் சம்மதமின்றி நடந்ததால், பெரும் விவாதத்திற்கு ஆளாகினார் ஸ்ரீஜா. சிரிஷ் பரத்வாஜ் என்பவரை 2007ல் ஹைதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது.
ஆர்ய சமாஜத்தில் நண்பர்கள் முன்னிலையில் தான் நடந்து. இதனையடுத்து தன் மகளை கடத்தியதாக சிரிஷ் மீது போலிஸில் புகாரளித்தனர். பின் தன் குடும்பத்தினரால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறினார் ஸ்ரீஜா. ஒரு வருடத்திற்குள் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததில் நிவ்ருதி என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்துல் சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் பின் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளது.
இந்த பிரச்சனைகள் காலப்போக்கில் தீவிரமாக ஒரே நேரத்துல் பெரும் மோதலாக உருவெடுக்க கணவர் சிரிஷ் மீது வரதட்சணை தொடபான புகாரை அளித்தார் ஸ்ரீஜா.
உடலளவிலும் துன்புறுத்தல் செய்ததால் 2014ல் சட்டப்படி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தார் ஸ்ரீஜா. அதன்பின் சில நாட்களிலேயே சிரிஷ் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்ரீஜா, சொந்த ஊருக்கு சென்றது குடும்பத்தினர் பார்த்த பள்ளிகால நண்பர் கல்யாண் தேவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
இவர்களுக்கும் ஒரு மகள் இருந்த நிலையில் ஸ்ரீஜா மற்றும் கல்யாண் தேவ் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தியதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து பேசிய கல்யாண் தேவ், நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.