பெண்களை அந்த மாதிரி டார்ச்சர் செய்யும் தயாரிப்பாளர்கள்!..கசப்பான அனுபவத்தை சொன்ன ரித்திகா சிங்
மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரித்திகா சிங் பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனை பற்றி பேசி இருக்கிறாராம். அதில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பெண்கள் சிறுமிகள் பாலியல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதில் சம்பந்தபட்டவர்கள் இளைஞர்கள் பெரும்பாலானோர் தயாரிப்பளாராக தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் அவசியம் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.
பாலியல் தொந்தரவு செய்தால் அவரை திருப்பி தாக்க வேண்டும் என்று ரித்திகா சிங் கூறியதாக பயில்வான் கூறியுள்ளார்.