சும்மாவே இருக்க முடியாதா!! E-சிகரெட் பிடித்து மாட்டிக்கொண்ட ரியான் பராக்..

Punjab Kings Rajasthan Royals Riyan Parag IPL 2026
By Jai Apr 29, 2026 12:00 PM GMT
Report

2026 ஐபிஎல்

2026 ஐபிஎல் தொடர் தற்போது பாதிக்கு பாதி போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. நேற்றைய 40வது போட்டியில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதியது. முதலில் பேட்டி செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 222 ரன்களை குவித்தது.

இதன்பின் ஆடிய ராஜ்ஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்து வென்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் வெற்றிபெற்றாலும் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் சர்ச்சையில் சிக்கியதுதான் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

சும்மாவே இருக்க முடியாதா!! E-சிகரெட் பிடித்து மாட்டிக்கொண்ட ரியான் பராக்.. | Riyan Parag Smoking An E Cigarette During Match

ரியான் பராக் ’வேப்’

ராஜஸ்தான் அணி பேட்டிங்கின் போது 16வது ஓவரில் கேமராக்கள் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்ப, அப்போது ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் ’வேப்’(E-cigarette) பயன்படுத்தும் காட்சிகள் லைவில் பதிவாகியது.

இந்த வீடியோ இணையத்தில் உடனே பரவ மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. ஐபிஎல் விதிப்படி டிரெஸ்ஸிங் ரூமில் புகைப்பிடிப்பதோ அல்லது இதுபோன்ற சாதனங்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னனு சிகரெட் பயன்படுத்துவது மின்னனு சிகரெட் தடைச்சட்டம் 2019 படி சட்டவிரோதமானது. இதன் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி, பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரியான் பராக் செய்த செயல் சட்டவிதிப்படி சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், டக் - அவுட் இடத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதற்காக பிசிசிஐ அவருக்கு அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.