விஜயகாந்துக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது!! லிஸ்ட் போட்ட பிரபல இயக்குநர்..
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னால் அனைவருக்குமே அவரது திடக்காத்திரமான உடலமைப்பு, கனீர் பேச்சு, கலையான் உருவம், அவர் செய்த உதவிகள் தான் நியாகம் வரும். அப்படிப்பட்ட மனிதர் உயிரிழந்த சம்பவம் பலரது மனதையும் உடைத்தது.
அவர் பற்றிய பல விஷயங்கள் பிரபலங்கள் பகிர்ந்தும் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. தற்போது கேப்டன் விஜயகாந்த் குறித்து இயக்குநர் ஆர் கே செல்வமணி சில விஷங்களை பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆர் கே செல்வமணி
அவர் அளித்த பேட்டியில், தனது கலைல் யாராவது விழுந்தாலோ, தனக்கு கூழைக்கும்பிடு போட்டாலோ விஜயகாந்துக்கு சுத்தமாக பிடிக்காது. இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
அவர் கீழே உட்காந்திருந்தபோது நீங்கள் மேலேகூட உட்காரலாம், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். அதேபோல் அவரது படுக்கையில் அவரது உதவியாளர் யாராவது படுத்திருந்தால் எழுப்பக்கூட மாட்டார் என்று ஆர் கே செல்வமணி பகிந்து கொண்டிருக்கிறார்.