ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவா இது!! அம்மாவுடன் எடுத்த புகைப்படம் வைரல்..

Robo Shankar Tamil Actress
By Edward May 14, 2023 07:00 AM GMT
Report

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானரர்களில் ஒருவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி கொடுத்த நல்ல வரவேற்பால் வெள்ளித்திரையில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

காமெடி நடிகராக நடித்து வந்த ரோபோ சங்கர் சமீபத்தில் படுஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்து வந்துள்ள புகைப்படம் வைரலானது.

தற்போது அதிலிருந்து மீண்டு வர பல உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் தன் மகள் இந்திரஜாவை பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

அன்னையர் தினத்தன்று அவரது அம்மா கையில் தூக்கி வைத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.