நிக்க கூட தெம்பில்லாமல் இருக்கும் ரோபோ சங்கர்.. இவருக்கு இப்படிபட்ட நோயா!
விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு தனது மிமிக்ரி திறமையை காட்டி மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் ரோபா ஷங்கர்.
சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்த இவர் வெள்ளித்திரையிலும் நடிக்க பட வாய்ப்புகிடைத்தது. சமீபத்தில் ரோபோ ஷங்கர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்த படி இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ரோபோ ஷங்கர் இந்த நிலைமைக்கு காரணம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் இருக்கும் போது நல்ல மனிதராக தான் இருந்தாராம். ஆனால் சினிமாவிற்கு சென்ற பிறகு சில நண்பர்களுடன் சேர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாராம்.
இதனால் ரோபோ ஷங்கருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அளவிற்கு சென்றுள்ளது. தற்போது ரோபோ ஷங்கரால் நிக்க கூட தெம்பில்லாமல் இருக்கிறார்
என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.