நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், அதன்பின் வெள்ளித்திரையில் ஜொலித்து வந்தார்.
சமீபத்தில் உடல் எடையை படுமோசமாக மாறி ஒல்லியானதோடு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரின் புகைப்படத்தை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி என்று ஆச்சரியப்பட்டு அதிர்ச்சியாகினர்.
ஆனால் அவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாக ரோபோ சங்கர் மனைவி கூறியிருந்ததை பலரும் நம்பவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான குடியால் மஞ்சள் காமாலை வந்து உடலை மோசமாக்கியது தான் காரணம் என்று பலர் கூறி வந்தனர். தற்போது அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார் ரோபோ சங்கர்.
இந்நிலையில், அவரது மனைவி பிரியங்கா சங்கர் கேபிஒய், குக் வித் கோமாளி, பிளஸ் சைஸ் மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். கணவரை போல் ஆரம்பத்தில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட பிரியங்கா சங்கர் தற்போது உடல் எடையை குறைத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரோபோ சங்கர் மனைவியா இது என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.