நிக்க கூட தெம்பில்லாமல் இருக்கிறார் ரோபோ சங்கர்!! பயில்வான் சொன்னதை உண்மை என்று உளறிய பிரபலம்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், அதன்பின் வெள்ளித்திரையில் ஜொலித்து வந்தார்.
சமீபத்தில் உடல் எடையை படுமோசமாக மாறி ஒல்லியானதோடு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரின் புகைப்படத்தை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி என்று ஆச்சரியப்பட்டு அதிர்ச்சியாகினர். ஆனால் அவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாக ரோபோ சங்கர் மனைவி கூறியிருந்ததை பலரும் நம்பவில்லை.
ஆனால் பயில்வான் ரங்கநாதன் அளவுக்கு அதிகமாக குடித்ததால் மஞ்சள் காமாலை வந்து உடல் எடையை மோசமாக்கிவிட்டு நிற்க கூட தெம்பில்லாமல் ஆகிவிட்டார் என்று கூறியிருந்தார்.
அவர் சொன்னதை போல், ரோபோ சங்கருக்கு நெருக்கமாக இருந்த நடிகர் போஸ் பேட்டியொன்றில், ரோபோ சங்கருக்கு உடல் நிலையில் பிரச்சனை இருப்பது உண்மை தான் என்றும் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூடியவிரைவில் குணமாகிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரோபோ சங்கர் நல்ல மனிதர் என்றும் அவரும் நானும் மாமா மச்சான் என்று கூப்பிடும் அளவிற்கு பழகி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் பயில்வான் சொன்னதை போல் ரோபோ சங்கர் குடியால் தான் உடலை கெடுத்துக்கொண்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது ரோபோ சங்கர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்ற வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.