அநியாயம் பண்றீங்களேப்பா! வியக்க வைத்த ரோஜா சீரியல் காட்சி..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா. சுமார் 4 ஆண்டுகளாக 1030 எபிசோட்டிற்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது.
சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கரி மற்றும் சுப்பு சூர்யன் நடித்து வருகிறார்கள். பல பரிமானங்களை கொண்டு கதை சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் வில்லி ரோஜாவை துப்பாக்கியால் சுடும் காட்சி ஒளிப்பரப்பானது. டம்மி புல்லட்டை துப்பாக்கியில் மாற்றி இருக்கிறார் ஹீரோ.
இதனால் தப்பித்த ரோஜாவிற்கு பதிலாக மரணமடைந்த வேறொரு பெண்ணிற்கு ரோஜாவின் முகத்தை மாற்றியுள்ளனர். இந்த காட்சியை பார்த்து பலர் ஷாக்காகி வருகிறார்கள். சீரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று பலர் கதறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இந்த கதை தற்போது 20 வருடத்திற்கு பின்னால் நடிக்கவிருக்கும் கதையாக மாற்றியுள்ளனர். அதில் புது வில்லியாக நடிகை சோனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Humans ஆடா நீங்க???? @DrSharmila15 மேடம் ??? pic.twitter.com/dYED0iWLcV
— விஜய் (@adi10vj) January 7, 2022