கதை இப்படி போகுதா? சீரியலுக்கு பிறகு எடையை குறைத்த ரோஷ்னி ஹரிபிரியன்..
சின்னத்திரையில் நடித்து வரும் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு பெற்றும் நடித்து வருகிறார்கள். அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்திருந்தார்.
கண்ணம்மா பாரதியுடன் எப்போது சேறுவார் என்று எதிர்ப்பாத்திருந்த நிலையில் ரோஷினி சில காரணங்களால் சீரியலை விட்டு வெளியேறினார். இதற்கு காரணம் பட வாய்ப்புகள் வருவதுதானாம்.
சமீபத்தில் ரோஷினி ஜெய் பீம், சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட முக்கிய படங்களை பாரதி கண்ணம்மா சீரியலுக்காக இழந்துள்ளார் என்று சீரியல் இயக்குனர் தெரிவித்திருந்தார். தற்போதுபடங்களில் கமிட்டாகி வரும் ரோஷினி உடல் எடையை குறைத்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது மொட்டை மாடியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இப்படி ஒல்லியாகிவிட்டீங்களே என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு மாறியுள்ளார்.