சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரோஷினியா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை ரோஷினி ஹரிப்ரியன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி பல்லாயிரம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இதன்பின் தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, ரோஷினி வெளியேறினார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின், படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் ரோஷினி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் ரோஷினி, தற்போது கோட் சூட் அணிந்து செம மார்டனாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும், நம்ம பாரதி கண்ணம்மா ரோஷினியா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..