இந்த சீரியலால் வாழ்க்கையே போச்சே! சூர்யா படத்தை இழந்த ரோஷினி!
தொலைக்காட்சி தொடரில் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தினை பிடித்து வருவது பாரதி கண்ணம்மா. வருண் பிரசாத், ரோஷினி ஹரிபிரியா இணைந்து நடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்த இந்த சீரியலில் திடீரென ரோஷினி விலகினார்.
அவருக்கு பதில் கருப்பான தோற்றம் கொண்ட வினுஷா நடித்து வருகிறார். ரோஷினி சீரியலில் இருந்து விலகுவற்கு காரணம் படவாய்ப்புகள் கிடைத்ததாலும், வெப் சீரிஸ் படங்களில் கமிட்டாகியதும் தானாம்.
இதுகுறித்து பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் ஏற்கனவே இரு படங்களை ரோஷினி இழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் முன்னேற அடுத்தக்கட்டத்தை அவரவர்கள் தான் முன்னெடுக்க வேண்டும்.
அப்படிதான் ரோஷினி சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் செங்கேணி ரோலில் முதன் முதலாக பேசப்பட்டாராம். அப்போது சீரியலில் நடித்துக்கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பை இழந்தார். மேலும் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடிக்கவிருந்தார்.
அதிலும் கோட்டைவிட்டு விட்டார் ரோஷினி. இந்த இரு படங்கள் அவர் வாழ்க்கையில் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பிடித்திருப்பார் ரோஷினி என்று இயக்குனர் பிரவீன் கூறியுள்ளார்.