ட்ரெஸ்ஸிங் ரூமில் சிகரெட், இந்திய கிரிக்கெட் ப்ளேயருக்கும் பெரிய அபராதம்

Cricket IPL 2026
By Tony Apr 30, 2026 11:30 AM GMT
Report

IPL

இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கினாலே கிரிக்கெட் ஜுரம் தொற்றிக்கொள்ளும். ஆம், 20 ஓவர் ஐபிஎல் போட்டி தொடங்கி பட்டிதொட்டியெல்லாம் கிரிக்கெட் பற்றியே பேச்சு இருக்கும்.

இந்த ஐபிஎல் மூலம் பல இளம் கிரிக்கெட் வீரர்கள் நன்றாக விளையாடி இந்திய டீமிற்குள் வருவார்கள், அந்த வகையில் தன் அதிரடி ஆட்டத்தால் பெயர் பெற்றவர் ரியான் பர்க். இவர் RR அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்.

அந்த அணியின் கேப்டனும் கூட, இவர் மேட்ச் பொழுது ட்ரெஸ்ஸிங் ரூமில் எலட்ரிக் சிகரெட் பிடித்துள்ளார், இது கேமராவில் பதிவாகியுள்ளது.

அபராதம்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதற்கு கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது, அதாவது ரியான் பர்க் செயலுக்கு அவருடைய சம்பளத்தில் 25% அபராதம் போட்டுள்ளனர்.

இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகின்றது. 

ட்ரெஸ்ஸிங் ரூமில் சிகரெட், இந்திய கிரிக்கெட் ப்ளேயருக்கும் பெரிய அபராதம் | Rr Captain Riyan Parag Has Been Fined