மீண்டும் ஆரம்பித்த டிடி! ராம் சரணிடம் இப்படியொரு கேள்வி கேட்ட வீடியோ..
தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களுக்கு 2022 பெரிய டிரீட்டாக அமைய இருக்கிறது. அதற்கு காரணம் இரு ஆண்டுகளாக காத்திருக்கும் அஜித்தின் வலிமை படத்தின் வெளியீடும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம்சரண், ஜுனியர் என் டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகவுள்ளது.
வலிமை படம் பெரியளவில் பிரமோஷன் செய்யாமல் மேக்கிங் வீடியோ மற்றும் டிரைலர் மூலம் கவர்ந்திழுத்து வருகிறது. ஆனால் ஆர் ஆர் ஆர் படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால் மிகப்பெரியளவில் பிரமோஷன் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் 5 மொழிகளுக்காக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
மூவரிடமும் டிடி கேட்ட கேள்விகளுக்கு அமைதியாக மகிழ்ச்சியுடம் பதிலளித்துள்ளனர். அதில் ராம் சரணிடம் பொண்ணுகளிடம் கிண்டல் செய்து திட்டுவாங்குவதுண்டா என்று கேட்டதற்கு பெல் அடித்து காமெடி செய்துள்ளார்.