என்ன ராஜமவுலி சார் இதெல்லாம்! RRR படத்தில் இப்பயொரு லாஜிக் மீரலா! பீஸ்ட்-யே பரவால்ல?
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேர் எடுத்தவர்களில் ஒருவர் இயக்குனர் ராஜமவுலி. பாகுபலி முதம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வெளியிட்டு இந்திய சினிமாவில் பான் இந்திய படத்தினை உலகரியச்செய்தவர்.
பல கோடி வசூல் சாதனை படைத்த இப்படங்களுக்கு பிறகு ராம்சரண், ஜூனியர் என் டி ஆரை வைத்து RRR படத்தினை இயக்கினார். படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையை முறியடித்தது.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் லாஜிக் மீரல்களை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், தற்போது RRR படத்தின் ஒருசில காட்சிகளையும் கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தில் பீம் தான் வேட்டையாடிய விலங்குகளை வைத்து வெள்ளைக்கார மாளிகையில் பெரிய போரை உருவாக்குவார். அப்படி விலங்குகளை எடுத்து வந்த காட்சியில் புலி கூண்டில் மான் வைத்திருப்பது தான் தற்போது ரசிகர்களின் பெரிய அதிர்ச்சியான விசயம்.
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்று கேள்வி பட்டு இருப்போம் மானைக்கூடவா சாப்பிடாமல் போருக்காக காத்திருக்கும் என்று ரசிகர்கள் இந்த லாஜிக் மீரலை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Tigers and Deers in the same cage!
— Yashwanth (@YashuTarak_45) May 25, 2022
Ela sir...@ssrajamouli?#RRRMovie pic.twitter.com/inPK9ICP6f