80 கோடிக்கு ஆஸ்கர் விருதை வாங்கிய RRR படக்குழு!! நாட்டு நாட்டு பாடல் விவகாரத்தை இழுத்துவிட்ட இசையமைப்பாளர்
ஒவ்வொரு ஆண்டும் உலகவில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த முறை இந்திய சினிமா படங்களும் ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளது.
அந்தவகையில் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த ஆர் ஆர் ஆர் படத்தில் அமைந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்-க்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் ஆஸ்கர் விருதினை 80 கோடி கொடுத்து வாங்கியதாக சர்ச்சையான கருத்து இணையத்தில் பரவி வருகிறது.
ஆர் ஆர் ஆர் படத்தினை போன்று ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கொடுக்கும் போது கூட இந்த விமர்சனம் எழுந்தது என்று குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் சில கருத்துக்கள் கூடிய பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

